ஐநா தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியின் சிலையைக் காண்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது: பிரதமர்

0
96

ஐநா தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியின் சிலையைக் காண்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து ஐநா பொதுச் செயலாளர் திரு ஆண்டனியோ குட்ரஸ் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஐநா தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையைக் காண்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. காந்தியின் சிந்தனைகளும், கொள்கைகளும் நமது பூமியை மேலும் முன்னேற்றமடையவும் நீடித்த வளர்ச்சியை அடையவும் செய்யட்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here