தாய் சேய் நலத் திட்டங்கள்

0
110

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம்: புதிதாக ஒப்புதல் பெறப்பட்ட மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம், பல்னா திட்டம் என்ற பெயர் சேர்க்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பணிபுரியும் தாய்மார்களின் 6 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு தினசரி பராமரிப்பு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நிலவரத்தை மேம்படுத்தி வருகிறது. 2020ம் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்காக பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.75 கோடியாக இருந்தது.2021ம் நிதியாண்டில் ரூ.53 கோடியாக இருந்தது.

பி.எம் கேர்ஸ் திட்டம்:கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் உன்னதமான மத்திய அரசின் பி.எம் கேர்ஸ் திட்டம், இந்தக் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிப்பை உறுதி செய்கிறது. 23 ஆண்டுகளுக்கு இந்தக் குழந்தைகளுக்கு இத்திட்டம் உதவும்.பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையும் 18 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் தொகை வருவது போல் கணக்கிடப்பட்டு குழந்தையின் பெயரில் நிதி வரவு வைக்கப்படுகிறது.இந்தத் தொகை அஞ்சலகத்தில் டெபாசிட் செய்யப்பட்டு மாத உதவித் தொகையாக 18 வயதிலிருந்து 23 வயதுக்குள் இந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.23 வயதை அடைந்ததும் ரூ.10 லட்சம் மொத்தமாக அளிக்கப்படும்.குழந்தைகளை வளர்க்கும் அவர்றின் உறவினர்களுக்கு, ‘வாத்ஸ்சல்ய மிஷன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா அல்லது தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்க்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.மேலும் 23 வயது வரை குழந்தைகளுக்கு காப்பீடும் அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தில், தமிழகத்திலிருந்து 339 குழந்தைகளும் புதுச்சேரியிலிருந்து 11 குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அங்கன்வாடி மையங்களில் கல்வி: அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திறன் இயக்கத்தின் கீழ், மழலைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, பள்ளிக்கு முந்தைய உபகரணப் பெட்டிகள் திட்டத்திற்கு 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.5 79.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, 3 முதல் 6 வயது வரையிலான பிரிவில் 3.03 கோடி குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள் மூலம் மழலைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு முந்தைய மழலையர் பள்ளிகளில் கற்பித்தல் மூலம், பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை தயார்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.விளையாட்டு அடிப்படையிலான பயிற்சி, குழந்தைகளுக்கு பிடித்த அணுகுமுறை மேம்பாடு ஆகியவை இத்திட்டத்திற்காக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.உடற்கல்வி, சுகாதாரம், எந்திர மேம்பாடு, மொழி மேம்பாடு, படைப்பாற்றல் திறன் ஆகியவையும் இதில் அடங்கும்.நாடு முழுவதும் இது குறித்து ஆய்வு நடத்தி மாதிரி நடவடிக்கைப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி அவற்றை வலுப்படுத்த வகை செய்கிறது.உயர்தரமான உள்கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியவை கற்பித்தல் சூழலை மேம்படுத்தும்.

ஊட்டச்சத்து இயக்க நிதி அதிகரிப்பு: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0″ க்கு மத்திய் அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இது ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் நடைமுறைகளை உருவாக்குவதற்கான பணி முறையில் ஒரு முக்கிய மாற்றமாகும். அதிகபட்ச ஊட்டச்சத்தை ஏற்படுத்துவதற்காக 2ம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் வளர்இளம் பருவ சிறுமிகளுக்கான திட்டம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2020ம் நிதியாண்டில் ரூ.19,834.37 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.20,263.07 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.அங்கன்வாடி சேவைகளை வலுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை பெறவும் அங்கன்வாடி மைய ஊழியர்களின் திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.அங்கன்வாடி சேவை திட்டம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here