இந்துத்துவ வாழ்வியல் முறையில் இருந்து விலகியதால் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகிறோமா?

0
566

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகள் குறித்தான செய்திகள் நாடு முழுவதும் பகிரப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. அரசாங்கத்தை திட்டுவதும் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதும் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளன. அடுத்த வெள்ளம் வரும் வரை இவை மறக்கப்படுகின்றன.

      வாரக்கணக்கில் மழை கொட்டித் தீர்ப்பதால் பெருத்த சேதம் உண்டாகிறது.எதனால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன?

         இயற்கையில் உள்ள பல்வேறு உயிரினங்களும் இறைவனின் பல்வேறு வடிவங்க ளே என இந்து சமய நூல்கள் நமக்கு கற்பிக்கின்றன. ஹிந்துத்துவம் மற்ற உயிர்கள் உடன் நாம் இணைந்து வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது,அதே சமயத்தில் ஆபிரகாமிய மதங்கள் மனிதர்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தையும் மற்ற உயிர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் விதைக்கின்றன. இந்துத்துவம் இயற்கையை காப்பாற்றவும் ஆபிரகாமிக மதங்கள் இயற்கையை சுரண்டவும் சொல்லித்தருகின்றன.

        பலவிதங்களிலும் மேற்கத்திய அணுகுமுறையை பின்பற்றுவதால் இந்துக்கள் இயற்கையை சுரண்டுதல் என்ற அணுகுமுறையை பின்பற்றத் துவங்கியுள்ளனர். மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் பருவ மழை பொழிவதில் நிறைய மாறுபாடுகள் உண்டாகின்றன. ஏரிகளும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன எனவே நீர் ஓடுவதற்கான வழித்தடங்கள் அடைபட்டு வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

         இந்துத்துவ வாழ்க்கைமுறையான இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை புறக்கணிக்காமல் இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் நகரமயமாக்கல் என்ற இரண்டுக்கும் சமநிலை உண்டாக்கப்பட வேண்டும்.

         ஏரிகள்,மலைகள்,நீர்நிலைகள்,காடுகள் ஆகியவற்றின் இருப்புக்கும் அவை இயங்குவதற்கும் மித்திரன்,வருணன்,இந்திரன்,மருத்துக்கள்,ஆதித்யன் ஆகியோரே காரணம் என ரிக் வேதம் கூறுகிறது இயற்கைக்கு எதிரான மனிதர்களின் செயல்பாடுகளளே பருவநிலை தவறுவதற்கும் பயிர்கள், சுற்றுச்சூழல்,தண்ணீர் மற்றும் இதர இயற்கை வளங்கள் சீரழிவிற்கும் காரணமாகின்றன என இந்துமத பெரியோர்கள் கூறுகின்றனர் அவர்கள் இயற்கையில் உள்ள ஒவ்வொன்றையுமே தோழமையுடனும் கருணையுடனும் காண்கின்றனர்.

मित्रस्य मा चक्षुषा सर्वाणि भूतानि समीक्षन्ताम् ।
मित्रस्याहं चक्षुषा सर्वाणि भूतानि समीक्षे, मित्रस्य चक्षुषा समीक्षामहे ॥

       “இவ்வுலகத்தின் ஒவ்வொரு படைப்பையும் நான் தோழமையுடன் காண்கின்றேன். இயற்கையில் உள்ள ஒவ்வொரு வளத்தையும்  நான் தோழமையுடன் காண்கின்றேன்.இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் என்னை தோழமையுடன் காணட்டும்.இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் மற்றொன்றறை அப்படியே காணட்டும்.” இதுவே மேற்கண்ட ரிக் வேத மந்திரத்தின் அர்த்தம்.

இந்து சமய நூல்கள் நாம் வாழ்க்கையை வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளையும் நம் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வுகளையும் கொடுக்கின்றன. இவற்றை எப்போது நாம் கடைபிடிக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போது இந்த உலகம் வாழ மிகவும் சிறந்த இடமாக மாறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here