பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன

0
91

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்துள்ளன. உரி தாக்குதலுக்கு எதிராக 2016ல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. 2019ல் நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2014 முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. இதில், பொதுமக்களின் இறப்புகளும் 89 சதவீதமாக குறைந்துள்ளது, 6,000 போராளிகள் சரணடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத செயல்கள் 168 சதவீதம் குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் குற்றச்செயல்களும் 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015 முதல் 2022ம் ஆண்டு வரை இடதுசாரி பயங்கரவாத நடவடிக்கைகள் 265 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் வளர்ச்சிகான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது. திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் முழுவதுமாகவும், அசாமில் 60 சதவீதமும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட போடோ ஒப்பந்தம், கர்பி அங்லாங் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here