சண்டிகர், டிச.22. பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, அடர்ந்த மூடுபனியின் மறைவில் ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்த கடத்தல்காரர்களின் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளதை அடுத்து எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் மற்றும் ஹெராயின்களை வீசுவதற்கான ட்ரோன் இயக்கங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
“நாங்கள் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளோம், மேலும் கடத்தல்காரர்களின் முயற்சியை முறியடிக்க ‘நாகாஸ்’ (சோதனைச் சாவடிகள்) மற்றும் BSF (எல்லைப் பாதுகாப்புப் படை) வீரர்கள் விழிப்புடன் உள்ளனர்” என்று படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.