ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரச்சாரம்

0
271

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் ‘ஒரு வாரம், ஒரு ஆய்வகம்’ என்ற தனித்துவமான பிரச்சாரத்தை தொடங்கி வைத்து அதற்கான இலச்சினையை டெல்லியில் வெளியிட்டார். நாடு முழுவதும் உள்ள சி.எஸ்.ஐஆ.ர் எனப்படும் அறிவியல் தொழிலக ஆய்வக கவுன்சிலின் 37 ஆய்வகங்கள் தங்களது கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களைபிறஆய்வகங்களுக்கும் பங்குதாரர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், “கடந்த 2014 மே மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அறிவியல் முயற்சிகளுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவால் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் சூழலில் பாரதம் தினமும் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. நமது நாட்டின் அறிவியல் அணுகுமுறை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. சர்வதேச புதுமைகள் கண்டுபிடிப்பு தர வரிசையில் 2015ம் ஆண்டில் 81வது இடத்தில் இருந்த பாரதம், 2022ம் ஆண்டில் 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து, ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரச்சாரத்தில் 37 சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்கள் தங்களது தனித்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதோடு தொழிலகம் மற்றும் ஸ்டார்ட் அப் சந்திப்பு, மாணவர்கள், சமுதாய இணைப்பு ஆகியவை நடக்க உள்ளன” என்று கூறினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி, ”இந்த பிரச்சாரம் சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பின் வெற்றிகளை நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் எடுத்துரைக்கும். மேலும் பிரதமரின் கனவான 2047 ஆண்டிற்குள் மேக் இன் இந்தியா புதுமை கண்டுபிடிப்பு முனையமாக பாரதத்தை மாற்றும் வகையில் சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்கள் தங்களின் பங்களிப்புகளை தொடர்ந்து வழங்கும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here