மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஒரு நேர்காணலில், “புத்தாக்க சிந்தனைகளுடன் கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கே எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தான் 2023ம் ஆண்டிற்கான வளர்ச்சிப் பாதைகள் அமையும். உலகம் 21ம் நூற்றாண்டின் முதல் காலாண்டை முடிவுக்குக் கொண்டுவரும் விளிம்பில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அந்த 21ம் நூற்றாண்டை பாரதத்தின் நூற்றாண்டு என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமையும். பிரதமர் மோடி தலைமையின் கீழ், பாரதத்தில் அறிவியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைந்துள்ளது. ஏனெனில் பிரதமர் உலகளவில் நமது முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த பல கடந்தகால நடைமுறைகளை மாற்றியதன் விளைவாக ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான முன்னணி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று பாரதத்தை சேர்ந்தவர்களால் வழிநடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ், சர்வதேச அரங்கில் ‘ஜி20 தலைமைத்துவம்’ மற்றும் ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு’ கடைப்பிடிக்கும் தேசமாக சர்வதேச அரங்கில் பாரதம் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. டுரோன் கொள்கை முதல் நீலப் பொருளாதாரம் வரை, விண்வெளித் துறையில் புதிய மாற்றங்கள் முதல் புவியியல் வழிகாட்டுதல்கள் வரை, நடப்பு நூற்றாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் பாரதத்தை உலக அரங்கில் முதன்மையான இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது” என்று கூறினார்.