பாரத மாதா சிலை திறப்பு

0
293

மதுராந்தகம் நீலமங்கலத்தில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பிரம்ம யோகானந்தா சுவாமிகளின் ஆசிரமமான சாஸ்திராலயாவில் பாரத மாதாவுக்கு 18 அடி உயர சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநில தலைவர் டாக்டர் குமாரசாமி, சென்னை மாநகர ஆர்.எஸ்.எஸ் துணைத் தலைவர் எம்.கே.ஆர்.மோகன், வடதமிழக மக்கள் தொடர்பு இணை அமைப்பாளர் ராமராஜசேகர், காஞ்சி கோட்ட ஆர். எஸ்.எஸ் தலைவர் ஏழுமலை, ஒருங்கிணைந்த தமிழகத்தின் உடற் பயிற்சி பொறுப்பாளர் டி.சங்கர், அகில பாரத ஐயப்ப சேவா சமாஜ் தென்பாரத பொறுப்பாளர் துரைசங்கர் உட்பட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காஷ்மீரில் இருந்து சுபோத் சுவாமிஜி அவர்களும் கன்யாகுமரியில் இருந்து திருமதி அனுசுயா செல்வி கலந்து கொண்டனர். உள்ளூர் பொதுமக்கள் ஆசிரம பக்தர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பாரத மாதா உற்சவ சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here