1. வெள்ளையனை நடுநடுங்கச் செய்தவர்களில் முக்கியமானவர் ராஷ் பிஹாரி போஸ். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடி.
2. இவரது தாத்தா இவருக்கு சிறு வயதில் வீர வங்கப் போர்வீரர்களின் கதைகளைச் சொல்லி வளர்த்தார். உயிரியல், மருத்துவம் ஆகியவற்றில் மேற்படிப்பு படித்து மார்டன் பள்ளியில் பட்டங்கள் பெற்றார். பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய தேசங்களுக்குச் சென்று பொறியியல் பயின்றார்.
3. தில்லி சதி வழக்கு என்ற பிரபலமான வழக்கில் இவர் சம்பந்தப்பட்டிருந்தார். 1912ல் அப்போதைய கவர்னர் ஜெனரல் ஹார்டிங்கை கொலை செய்ய வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு அது வைஸ்ராய் ஹார்டிங் மீது வீசப்பட்டது. ஆனால் குறி தப்பியதில் ஹார்டிங் தப்பித்தார்.
4. ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து 1915ல் உலகப் போர் சமயத்தில் நெருக்கடி கொடுக்க உருவாக்கப்பட்ட புரட்சி அமைப்பு கதர் அமைப்பு. அதில் ராஷ் பிஹாரி முக்கியப் பங்காற்றினார். பிரிட்டிஷ் போலீஸ் தேடிக் கொண்டிருக்க பிரிய தர்ஷன் தாகூர் என்ற பெயரில் 1915ல் ஜப்பானுக்குத் தப்பினார். அங்கே பிரிட்டிஷாருக்கு எதிராக இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.
5. இவர் ஆங்கிலேய இந்தியாவின் குடிமகன் என்று ஆங்கிலேய அரசு இவரை ஒப்படைக்கும்படி ஜப்பானுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் பிரிட்டனிடம் இவரை ஒப்படைக்க ஜப்பான் அரசு மறுத்துவிட்டது.
6. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் வீரர்களைக் கொண்டு 1942ல் இந்திய தேசிய ராணுவத்தை (INA) தொடங்கினார். பின்னர் இந்தப் படையை வழிநடத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.