ரஷ்ய ஊடகமான 6060 (TASS) ரஷ்ய ராணுவம் தற்போது அதிநவீன ”எஸ் 500 ப்ரொமீதியஸ்’ வான் பாதுகாப்பு அமைப்புகளை பெற துவங்கி உள்ளதாகவும் விரைவில் இதன் ஏற்றுமதி வடிவம் விற்பனைக்கு வரும் எனவும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பின் ஏற்றுமதியில் பாரதத்துக்கு ரஷ்ய அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2021ல் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசாவ் பாரதம் வந்திருந்த போது, பாரதம் தான் தனது முதல் எஸ் 500 வாடிக்கையாளராக இருக்கும் என கூறினார். இந்த எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே உள்ள எஸ் 400 அமைப்பின் மேம்பட்ட வடிவமாகும். அதை விட அதிக தூரத்தில் உள்ள அதனால் தாக்க முடியாத பாலிஸ்டிக் ஏவுகணைகள், டேங்கர் மற்றும் ஏவாக்ஸ் விமானங்கள் ஆகியவற்றை எஸ் 500 வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் என்பது அதன் சிறப்பம்சம் ஆகும். மேலும், சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 20 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கண்டறிந்து அவற்றில் 10 ஏவுகணைகளை ஒரேடியாக அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பது இதன் சிறப்பம்சம்.