பாரதத்தின் வளர்ச்சி

0
184

உலகில் நிலவும் குழப்பமான சூழல்கள், பொருளாதார மந்தநிலை, உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட சர்வதேச காரணிகளால் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 6.1 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்துள்ளது. 2022ம் ஆண்டில் கூறப்பட்ட 6.8 சதவீதத்தை விட இது சற்றே குறைவு. எனினும், பாரதம் வளர்ச்சிப் பாதையில் மிகவும் பிரகாசமாக உள்ளது, 2022 மற்றும் 2023ல் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதிப்புகள் இருந்தாலும், பாரதத்தின் வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கும் என ஐ.எம்.எப் கூறியுள்ளது. முன்னதாக உலகளவில் ஏற்படும் பொருளாதார மந்தநிலையை கருத்தில்கொண்டு வரும் 2023ல் பாரதத்தின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என ஐ.நா சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. சர்வதேச பொருளாதாரம் குறித்து கணித்துள்ள ஐ.எம்.எப், சீனா அதன் கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டை சமீபத்தில் தளர்த்தியதன் மூலம் அந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்படும். இது சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சாதகமான சூழ்நிலை உருவாக்குவது மட்டுமில்லாமல் பொருளாதார மந்தநிலையையும் சற்று குறைக்கும். உலகின் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் மேம்படும். உலக நாடுகள் தற்போது அதிகப்படியான பணவீக்கம், அதை சரிகட்ட மத்திய வங்கிகள் உயர்த்திய அதிக வட்டி விகிதம், உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்டவற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் சீனாவின் எழுச்சி முக்கியமானதாக விளங்குகிறது. 2023ம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதம் வரை உயரும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஐஎம்எப் கணிப்பு ஐஎம்எப் கணிப்பு ஐஎம்எப் கடந்த அக்டோபர் மாதம் உலகின் வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த சூழலில் அது சற்றே அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், 2022ல் சர்வதேச பணவீக்க அளவு 8.8 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த ஐ.எம்.எப், அதனை தற்போது 6.6 சதவீதமாக மாற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here