இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின

0
75

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து சென்னையில் 9-ம் தேதி ஐசிஜிஎஸ் சௌரியா தளத்தில் 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின. இரண்டு படைகளுக்கும் இடையே பெரிய அளவில் புரிந்துணர்வையும், உறவையும் மேம்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இயக்க விதிகள், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுதல், தோழமை உணர்வை கட்டமைத்தல், நடவடிக்கை, பயிற்சி, விளையாட்டு, சாகசம் ஆகியவற்றில் பரஸ்பரம் சொத்துக்களை பயன்படுத்துதல் குறித்த உடன்படிக்கை 2022 மே 19-ம் தேதி கையெழுத்திடப்பட்டது.

அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் சார்பில் கூட்டுப் பணிக்குழுவின் தலைவராக, வீர்சக்ரா விருது பெற்ற கர்னல் ஜென்ரல் (ஆபரேஷன்) சச்சின் நிம்பல்கர், இந்திய கடலோரக் காவல்படையின் சார்பில் கூட்டுப் பணிக்குழுவின் தலைவராக இயக்குநர் (பணியாளர்) டிஐஜி ஆர் கே சின்ஹா ஆகியோர் தலைமையேற்றனர். இரு படைகளின் பிரதிநிதிகளாக மூத்த அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் இயங்கும் விதம், கடலோரக் காவல்படைக் கப்பல்களின் திறன்கள், நவீனத் தொழில்நுட்பம், இடைவெளி ஒருங்கிணைப்பு முறை பற்றிய சிறிய விளக்கப்படம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here