நிர்வாகத்தில் நெறிமுறைகள் ஒழுக்கமும் அவசியம்- குருதேவ் ஶ்ரீ ரவிசங்கர்

0
76

மனித மூலதன மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமானவரி அலுவலக முதன்மை தலைமை ஆணையர் திரு ஆர். ரவிச்சந்திரன் முன்னிலையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி , “குடிமைப்பணி அலுவலர்களுக்கான நிர்வாகத்தில் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய முதன்மை ஆணையர் திரு. ஆர்.ரவிச்சந்திரன், ஒவ்வொருவரும் உடல், மன, ஆன்மிகத் தகுதியுடன் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வேத காலத்திற்கு முன்பே இருந்த தமிழ் மரபு மற்றும் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்தார்.

சிறப்புரையாற்றிய ஸ்ரீ குருதேவ், நாம் விரும்பாத விஷயங்களை, மற்றவர்களுக்குச் செய்யக் கூடாது என்பதுதான் நெறிமுறை என்றார்.

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு நமது தேசத்தை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் பெரிய பொறுப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தக் காரணத்திற்காக நெறிமுறைகளையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த அவர் அறிவுறுத்தினார். மேலும் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆன்மாவைக் கவனித்து ஆக்கப்பூர்வமாக இருக்குமாறு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘வாழும் கலை’ அறக்கட்டளையின் தன்னார்வத் தொண்டர்கள் குழந்தைகளிடையே “உள்ளுணர்வு மேம்பாடு” பற்றி விளக்கினர். இந்த திட்டம் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என வருமான வரி கூடுதல் ஆணையர் திரு வி. வித்யாதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here