லவ் ஜிஹாத்தில் கொல்லப்பட்ட பெண் காவலர்

0
67

பீகார் மாநிலம் கதிகாரைச் சேர்ந்த பிரபா பாரதி என்ற பெண் காவலர், கடந்த பிப்ரவரி 8ம் தேதி, ஹசன் அர்ஷத் என்ற முகமது ஹசன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணையில் முகமது ஹசன், முகமது ஹசன், பிரபா பாரதியை நீண்ட காலமாக பின்தொடர்ந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். மேலு ரகசியமாக எடுக்கப்பட்ட அவரது அந்தரங்க வீடியோக்களை பகிரங்கப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால், பிரபா பாரதி, திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து பிரபாவை முகமது ஹசன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் பிரபா சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த வழக்கில் ஹசன் அர்ஷத், கதிர், சோனு, டேனிஷ், சஜ்ஜாத், திக்கா யாதவ், பிரியான்ஷ் உள்ளிட்ட 7 பேர் மீது பீகார் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது காதிரை மட்டுமே கைது செய்துள்ளது. இதுகுறித்து பிரபாவின் சகோதரி பிரதிமா குமாரி கூறுகையில், “கடந்த சில நாட்களாகவே பிரபாவை ஹசன் துன்புறுத்தி வருகிறார். அடிக்கடி போன் செய்து மிரட்டுவது வழக்கம். மேலும் மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். நிக்காஹ் (முஸ்லீம் திருமணத்திற்கு) சம்மதிக்கவில்லை என்றால் அவளை கொன்று விடுவேன், அனைத்து அந்தரங்க வீடியோக்களையும் பகிரங்கப்படுத்துவேன் என்று மிரட்டி வந்தார். எங்கள் குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது சகோதரி கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார், இப்போது சுட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். எனது சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார். இந்தக் குற்றம், நமது மதச்சார்பற்ற (ஹிந்து எதிர்ப்பு) ஆட்சியில் நிலவும் பயங்கரமான நிலையை சுட்டிக்காட்டுகிறது. காவல்துறையில் பணிபுரியும் ஹிந்துப் பெண்கள் கூட முஸ்லிம் பாலியல் வன்கொடுமையாளர்களிடமிருந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களின் புகார்கள் கூட காவல்துறையால் கேட்கப்படாமல் போகும் போது, ஒரு சாதாரண பெண்ணின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here