சிவராத்திரியை தடுக்கும் மத அடிப்படைவாதிகள்

0
161

ஜார்கண்ட் மாநிலம் பலமுவில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வன்முறை வெடித்தது. மசூதி சதுக்கத்தின் அருகே பிப்ரவரி 15 அன்று, சிவ வழிபாட்டுக்கு தயாராகி கொண்டிருந்த பக்தர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. சில வாகனங்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த பலத்த காவல் போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதளமும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. அந்த வன்முறையால் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பிப்ரவரி 15, 2023 புதன்கிழமை நடந்தது. பலமுவின் பாங்கி தொகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிப்ரவரி 18 அன்று கொண்டாடப்படும் மகா சிவராத்திரிக்காக உள்ளூர் ஹிந்துக்கள் பகத் சிங் சௌக்கில் வரவேற்பு வாயில்களையும் தோரண அலங்காரங்களையும் அமைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், அங்கு வந்த முஸ்லிம்கள், இந்த வரவேற்பு வாயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக மாறியது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் கவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹிந்துக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பெட்ரோல் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இதுவரை, 6 காவலர்கள் உட்பட சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here