ஆர்எஸ்எஸ் பற்றிய தவறான செய்தி-3 ஊடக நிறுவனங்கள் மீது எஃப்ஐஆர் பதிவு

0
106

அயோத்தியில் 100 ஏக்கர் நிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை கட்டுவதாக கூறிய 3 ஊடக நிறுவனங்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், ஹரிபூமி மற்றும் நியூஸ் 24 வெளியிட்ட சமீபத்திய செய்திகளில், நாக்பூரை விட 100 மடங்கு பெரிய பரப்பளவில் அயோத்தியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஆர்எஸ்எஸ் தனது இரண்டாவது தலைமையகத்தை அமைக்கும் என்று ஊடக நிறுவனங்கள் கூறின.

இதனை அடுத்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) ஆவாத் மாநில ஊடகத்துறை பிரமுகரான டாக்டர் அசோக் துபே, ஹஜ்ரத்கஞ்ச் போலிஸில் ஆர்எஸ்எஸ் பற்றி போலி செய்திகளை பரப்பியதாக மூன்று முக்கிய செய்தித்தாள்கள் மீது புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து  ராகேஷ் அகர்வால் மற்றும் டைனிக் பாஸ்கர் பத்திரிகையின் ரமேஷ் மிஸ்ரா, ஹரிபூமியின் ஆசிரியர் மற்றும் நியூஸ் 24 இன் தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here