எம்.கே.தியாகராஜ பாகவதர்

0
143

1. 1-3-1910-ல் பிறந்தார். சொந்த ஊர் திருச்சி. தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆசாரியார். தாயார் மாணிக்கத்தம்மாள். சிறு வயதிலேயே இசையில் அதிக நாட்டம் கொண்டிருந்த தியாகராஜன், அதிகம் படிக்கவில்லை. ஏழு வயதிலேயே மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார்.

2. பாகவதரின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், நாடக உலகில் அவர் பெரும் புகழ் பெற்றார். எந்த நாடகக் குழுவிலும் சேராமல் ஸ்பெஷல் நாடகங்களில் மட்டும் நடிக்கலானார்.

3. பாகவதரும், எஸ்.டி.சுப்புலட்சுமியும் நடித்த “பவளக்கொடி” நாடகத்தை அழ.இராம.அழகப்ப செட்டியார் என்ற செல்வந்தர் பார்த்தார். அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க விரும்பினார். இருவரையும் ஒப்பந்தம் செய்தார்.

4. இந்தப் படத்தில் 60 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. .

5. அடுத்தபடியாக “திருநீலகண்டர்” என்ற சொந்தப்படத்தை தயாரித்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. பாகவதர் நடிப்பில் நல்ல மெருகேறி இருந்தது. “திருநீலகண்டர்” படத்தை அடுத்து மதுரை முருகன் டாக்கீசார் தயாரித்த “அசோக்குமார்” படத்தில் நடித்தார். இதில், பாகவதருடன் எம்.ஜி.ஆர். இணைந்து நடித்தார்.

6. தமிழகத்தில் திரைப்படத்துறையில் கோலோச்சியவர்களில் பாகவதர் முதன்மையானவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here