குண்டு வெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு

0
182

தமிழகத்தின் கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவர் காரிலேயே உயிரிழந்தான். அவனது வீட்டில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் ஏராளமான அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள், இது தொடர்பாக ஜமேஷா முபினுடன் சம்பந்தப்பட்ட மேலும் சில பயங்கரவாதிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்தில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் மற்றொரு பயங்கரவாத சம்பவம் நடைபெற்றது. அங்கு கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி பயங்கரவாத சதிச்செயலை அரங்கேற்ற ஆட்டோவில் கொண்டு சென்ற குக்கர் வெடிகுண்டு எதிர்பாராமல் வெடித்தது. இதில் அந்த குண்டை கொண்டுசென்ற பயங்கரவாதி ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். ஷாரிக் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக பயங்கரவாதி ஜமேஷா முபினும், மங்களூரு பயங்கரவாதி ஷாரிக்கும் கோவையில் சந்தித்து பேசியதாக தெரிய வந்துள்ளது. ஷாரிக் தென்னிந்தியாவில் பயங்கரவாத அமைப்பை நிறுவி, நாசவேலைகளில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மா நலங்களுக்கும் பயணப்பட்டு முஸ்லிம் பயங்கரவாத ஆதரவாளர்களை சந்தித்தது, நிதியுதவி பெற்றது, கேரளாவில் தங்கி டார்க்நெட் இணையதளத்தின் வழியாக பார்சல் மூலம் வெடிபொருட்களை வாங்கியது போன்ற பல தகவல்கள் என்.ஐ.ஏ. விசாரணையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு, 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாகவும் இவற்றில் அந்த பயங்கரவாத அமைப்பின் சகோதரர்கள், மதத்தின் மரியாதைக்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும், பா.ஜ.க, பாரத ராணுவத்துக்கு எதிராக எங்களுக்கு விரோதம் உள்ளது. அவர்களுக்கு எதிராக தென்னிந்தியாவில் எங்களது முஜாகிதின்கள் பயங்கரவாதிகள் போரை நிகழ்த்தினர். கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எங்கள் முஜாகிதீன்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here