இராணி கர்ணாவதி

0
242

புகழ்பெற்ற மகாராணா பிரதாப்பின் பாட்டி இராணி கர்ணாவதி.
ராணி கர்ணாவதி மேவார் இராஜ்ஜியத்தின் ராணா சங்காவை மணந்தார். இவருக்கு ராணா விக்ரமாதித்யன் மற்றும் ராணா உதய் சிங் என்ற இரண்டு இளவரசர்கள் இருந்தனர்.
கி.பி 1526 ல் பாபருக்கு எதிராக ராஜபுத்ர அரசர்களின் கூட்டமைப்பை ராணா சங்கா வழிநடத்தினார். முகலாயர்களுடனான போரில் ராணா சங்காவுக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டு இறந்தார்.
தனது கணவர் இறந்த பின்னர், 1527 முதல் 1533 வரை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
இதற்கிடையில், மேவாரை குஜராத்தைச் சேர்ந்த பகதூர் ஷா இரண்டாவது முறையாக தாக்கினான்.
ராணி முகலாயப் பேரரசர் உமாயூனிடம் உதவி கேட்டு ஒரு ராக்கி கயிறை அனுப்பினார். இதனால் இவரது பெயர் ரக்ஷாபந்தன் பண்டிகையுடன் மிக தொடர்புடையது.
சித்தோரின் வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள், ஆனால் எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். மேலும் உமாயூனால் சரியான நேரத்தில் உதவிக்கு வர இயலவில்லை. பஹதூர் ஷா இரண்டாவது முறையாக வெற்றிக் கொண்டார்.
தோல்வியடைந்த கர்ணாவதியும், அரசவையின் பிற பெண்களும் கி.பி 1535 மார்ச் 8 அன்று கூட்டுத் தீக்குளிப்பு மூலம் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here