சர்வதேச யோகா தினம் 2023-க்கு 100 நாட்களே உள்ள நிலையில், 3- நாள் யோகா பெருவிழா 2023-ல் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் பிரதமர் அழைப்பு

0
307

சர்வதேச யோகா தினம் 2023-க்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், அதனைக் குறிக்கும் வகையில், மூன்று நாட்கள் நடைபெறவுள்ள யோகா பெருவிழாவில் ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 3 நாள் யோகா பெருவிழா தல்கடோரா மைதானத்தில் மார்ச் 13-14 ஆகிய தேதிகளிலும், புதுதில்லி மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் 15-ந் தேதியும் நடைபெறவுள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

“யோகா தினத்துக்கு இன்னும் 100 நாட்களே உள்ளநிலையில், இதனை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகாவைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், அதனை உடனடியாகச் அங்கமாக்குங்கள்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here