திருநெல்வேலி எழுச்சி தினம்

0
166

1. 1908-ம் ஆண்டில் சுதேசி பிரசார இயக்க கூட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடத்தப்பட்டன.
2. இதில் பேசிய தலைவர்கள், அன்னிய நாட்டுப் பொருள்களை புறக்கணிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். சுதேசி உணர்வு மக்களிடம் தூண்டப்பட்டது.
3. இந்நிலையில் விபின் சந்திரபால் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியை சுயராஜ்ய நாளாக சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொண்டாடினர்.
4. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி இந்த விடுதலை விழா அடுத்த நாள் (மார்ச் 9-ம் தேதி) நடந்தது. அதில் வ.உ.சி.,சுப்ரமணிய சிவா,பத்மநாப அய்யங்கார் எழுச்சி உரையாற்றினர். அவர்கள் மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக திருநெல்வேலியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
5. அடுத்த நாள் (மார்ச் 13) மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாண்டனர். திருநெல்வேலியில் சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் கிளர்ந்தெழுந்த இச்சம்பவம் வரலாற்றில் திருநெல்வேலி எழுச்சி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
6. கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில், தேசமே வாய்ப்பூட்டு சட்டத்தால் துயில் கொண்டு இருக்கையில், பிரிட்டிஷாருக்கு எதிராக தேசத்தின் கடைக்கோடியில் இருந்த தமிழகத்திலும் உள்ள இளைஞர்கள் வெகுண்டெழுந்தனர்.
7. அதுவே திருநெல்வேலி எழுச்சி நாள். அப்போது நடைபெற்ற கலவரத்திற்கு காரணம் என வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரே என்று குற்றம் சுமத்தப் பட்டது. வழக்கு நடந்தது. வழக்கில் சாட்சிகள் நூற்றுக்கும் மேல் இருந்தனர். அவர்களில் பாரதியும் ஒருவர். இறுதியில் வ.உ.சி.க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சிவாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.
8. திருநெல்வேலி எழுச்சிக்கு பின்னரே தேசமெங்கும் சுதந்திரப் போராட்ட உணர்வு வீறு கொண்டு எழுந்தது. இந்த தினத்தின் முக்கியத்துவத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் பேச வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் திருநெல்வேலி எழுச்சி தின வரலாற்றை இடம்பெற செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here