நேற்று மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை கரூர் மாவட்டம் குளித்தலையில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP தென் தமிழ்நாடு உறுப்பினர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன், அதை எழுதுவதற்கான பயிற்சி, புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, காப்பீடு செய்வதின் அவசியம், அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுனர்கள் எடுத்துரைத்தனர். புதுக்கோட்டை கனகராஜ், எம்.என்.சுந்தர், கிராமியம் நாராயணன், குலோத்துங்க மணியன், சத்யபாலன், கோவை தியாகராஜன் பங்கேற்று பேசினர். தமிழக ஏபிஜிபி வல்லுனர் குழு பொறுப்பாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடராஜன், ராதிகா மற்றும் பன்னீர் செல்வம் செய்திருந்தனர்.