பிரச்சினையை தூண்டிய முஸ்லிம் நபர்

0
185

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் பேளூரில் பிரசித்திபெற்ற சன்னகேஸ்வரா சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டு திருவிழா, தேரோட்டம் நடைபெறும். இதற்கு கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள் இக்கோயில் தேரோட்டத்தின்போது பேளூர் தாலுகா தொட்டமேதூரு கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ‘குர்ஆன்’ ஓதுவார். முகலாயர்களின் கொடூர ஆட்சிக் காலத்தில் கட்டாயத்தின் பேரில் நடத்தப்பட்ட இந்த சடங்கு, பிற்காலத்தில் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வரும் ஏப்ரல் 4ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, கோயில் நிர்வாகத்தினர் தேரோட்டத்தை தொடங்கி வைக்க முஸ்லிம் பிரமுகரான சையது சஜ்ஜாத் பாஷாவை அழைக்க வேண்டியிருந்தது. ஆனல், ஹிந்து அமைப்புகள் அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்கள் அவரை சந்திக்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஹிந்து அமைப்புகள் அவரை அழைக்க எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு முஸ்லிம் நபர், வேண்டுமென்றே சமூக பிரச்சினையை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். திடீரென போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஹிந்து அமைப்பினரை பார்த்து ‘குர்ஆன் ஜிந்தாபாத்’ என்று தொடர்ந்து கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இருதரப்புக்கும் வாய்த்தகராறும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்து உடனடியாக அங்கு சென்ர காவல்துறையினர், இருதரப்பினரையும் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள்: கலைந்து செல்லாத காரணத்தால் லேசான தடியடி நடத்தப்பட்டது. பிரச்சினையை தூண்டிய முஸ்லிம் நபரை கவல்நிலையத்திற்கு விசாரனைக்கு அழைத்துச் சென்றனர். தடியடி நடத்தியதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதனையடுத்து அங்குவந்த தாசில்தார் மமதா, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களது கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here