ராம நவமி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி

0
228

கடந்த சில வருடங்களாக ஹிந்துக்களின் அனைத்து பண்டிகைகளின்போதும், கல் எரிதல், பெட்ரோல் குண்டு வீச்சு, மரக்கட்டை, கம்பு, கத்திகளால் தாக்குதல் நடத்துவது போன்ற பயங்கரவாத சம்பவங்களில் பல்வேறு முஸ்லிம் வன்முறைக் குழுவினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 33க்கும் அதிகம். வழக்குகள் பதியப்படாத, பேசித் தீர்க்கப்பட்ட சம்பவங்கள் எவ்வளவு என யாருக்கும் தெரியாது. இந்த சூழலில், மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரின் கிராத்புராவில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் பக்தர்கள் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்திற்கு அமைதியாக தயாராகி கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமர் கோயிலுக்கு வெளியே மக்கள் ஒருவரையொருவர் கற்களை வீசிக்கொண்டும், பல வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 29 மற்றும் 30 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் இந்த மோதல் வெடித்தது. இந்த தாக்குதலில் இரண்டு காவலர்கள் உட்பட 6 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நள்ளிரவுக்கு முன் தொடங்கிய வன்முறை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்தது. இச்சம்பவத்தின் போது, கற்கள் வீசப்பட்டதுடன், தனியார் மற்றும் காவல்துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்த வாகனங்களை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். மோதலைத் தொடர்ந்து, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தேசிய கார்ப்பரேட்டர் முகமது நசீருதீன், சம்பவ இடத்திற்கு வந்து அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ராம நவமி மற்றும் ரம்ஜான் ஆகிய இரண்டு முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here