தற்சார்பு இந்தியா: ராணுவத்திற்காக தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஆயுதம் மற்றும் சமவெளிகளைக் கண்டறியும் 12 ரேடார் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.9,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில், ராணுவத்திற்காக தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் சமவெளிகளைக் கண்டறியும் 12 ரேடார் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.9,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று (மார்ச் 30, 2023) கையெழுத்திட்டது.
தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை (ஏடபிள்யூஎஸ்) கொள்முதலுக்கான ஒப்பந்தமானது பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8,160 கோடியாகும். இந்த ஆயுதங்கள் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்பிரிவுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள், தரையிலிருந்து உதவும் கருவிகள் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
ஆகாஷ் ஆயுத முறை (ஏடபிள்யூஎஸ்) என்பது நிலத்திலிருந்து வான்வழி நோக்கி குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் தன்மை படைத்த வான்வழிப்பாதுகாப்பு முறையாகும். இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வான்வழி ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்த (ஏடபிள்யூஎஸ்) தரம் உயர்த்தப்பட்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு எல்லைகளில் ராணுவப் பயன்பாட்டிற்காக இவை கொள்முதல் செய்யப்படுகின்றன.