ராம ராஜ்ஜியம் மற்றும் ஆன்மீக பாரதம் கனவு நனவாகும் -டாக்டர் மோகன் பகவத்

0
122

ஹரித்வார், மார்ச் 30. பூஜ்ய யோகரிஷி சுவாமி ராம்தேவ் ஜி மஹராஜ், தனது 29வது சன்யாஸ தினத்தில், அஷ்டத்யாயி, மஹாபாஷ்ய வியாகரன், வேதங்கள், வேதாங்கங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றில் தீட்சை பெற்ற நூற்றுக்கணக்கான கற்றறிந்த சன்யாசிகளுக்கு தீட்சை அளித்தார். இவர்களில் 60 பிரம்மச்சாரி சகோதரர்களும் 40 சகோதரிகளும் அடங்குவர். மேலும் 500 நைஷ்டிக பிரம்மச்சாரிகளுக்கு தீட்சை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் கலந்துகொண்டு ‘தங்கள் குழந்தையை வளர்த்து, நாட்டை, மதம், கலாச்சாரம் மற்றும் மனித நேயத்திற்காக அர்ப்பணிப்பது என்பது நவசன்யாசிகளின் பெற்றோர்களின் மிகப்பெரிய தியாகம்’ என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில்’இளம் சன்யாசிகளை நாட்டின் சேவைக்கு அர்ப்பணிப்பது ராமராஜ்யம் மற்றும் ஆன்மீக பாரதத்தின் கனவை நனவாக்குவது போன்றது’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here