பலத்த பாதுகாப்புடன் ராம நவமி ஊர்வலம்

0
98

டெல்லி ஜஹாங்கிர்புரியில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஸ்ரீராம நவமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணியை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் நான்கு கம்பெனி கலவர தடுப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜஹாங்கிர்புரியில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஜஹாங்கீர்புரியில் 5 கி.மீ தொலைவுக்கு ‘ஸ்ரீ ராம் பகவான் பிரதிமா யாத்திரை’ நடத்த பேரணி குழுவினர் கோரிய அனுமதியை காவல்துறை நிராகரித்துவிட்டது. அவர்களது கொண்டாட்டங்களை ஒரு பூங்காவிற்குள் நடத்துமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதையும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் ரம்ஜான் பண்டிகையின் போது பூங்காவில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர். முன்னதாக, கடந்த ஆண்டு ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் நிகழ்த்திய திட்டமிட்ட வன்முறையால் வடமேற்கு டெல்லியில் உள்ள ஹிந்துக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அந்த ஊர்வலத்தினர் மீது முஸ்லிம்கள், கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவற்றை நடத்தினர். பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஊர்வலத்தில் பங்கேற்ற ஹிந்துக்கள் பலரும் காவலுக்கு வந்திருந்த காவலர்களும் இதில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here