சீன அரசுக்கு மத்திய அரசு பதிலடி :அருணாச்சல் பெயர் மற்றம் விவகாரத்தில் கொந்தளிப்பு

0
111

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை ‘தெற்கு திபெத்’ என சீனா அழைத்து வருகிறது. சீன படைகள் இங்கு அவ்வப்போது அத்துமீறுவதும் வழக்கம்.
இதற்கு மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ‘அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என, சர்வதேச அரங்கிலும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புதிதாக சீனாவால் பெயர் சூட்டப்பட்டுள்ள 11 இடங்களில் ஐந்து மலைச்சிகரங்கள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். இவற்றை, ‘திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான்’ என, சீனா குறிப்பிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. ‘இந்திய – சீன எல்லை இப்போதும் பதற்றம் நிறைந்த, அபாயகரமான பகுதியாக உள்ளது’ என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், சமீபத்தில் ‘ஜி – 20’ மாநாடு தொடர்பான நிகழ்ச்சியும் அருணாச்சல பிரதேசத்தில் நடந்தது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள சீன அரசு, இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here