பெங்களூரு – சென்னேனஹள்ளி – ஜனசேவா வித்யா கேந்திரத்தில் ஏப்ரல் 7-9 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண கோபால் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நாடெங்கிலும் இருந்து 300 க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.பிரபல கல்வியாளர் பேராசிரியர் டாக்டர் எம்.கே. ஶ்ரீதர் உரையாற்றினார்.புதிய கள்விக் கொள்கை, கல்வியின் தரம், இயக்கப் பணியின் விரிவாக்கம், முன்னாள் மாணவர்களை வித்யா பாரதி நடவடிக்கைகளில் செயல்பட வைத்தல் போன்ற பல விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.நாடெங்கிலும் 25000 க்கும் அதிகமான கல்வி நிலையங்களை வித்யா பாரதி நிர்வகித்து வருகிறது. பாரதீயப் பண்பாட்டுடன் கூடிய கல்வியை வழங்கி வருகிறது.