முதல் இந்திய சுதந்திரப்போரை தொடங்கி வைத்த மாவீரன் மங்கள் பாண்டே

0
236

“மங்கள்பாண்டே” என்ற இளைஞன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ஏப் 8…
1857 ல் நடந்தது, சிப்பாய் கலகம் அல்ல…. இந்திய சுதந்திரப் போராட்டம்!
வானுள்ளவரை, கடல் நீருள்ளவரை பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியம் நிலைத்திருக்கும் என நினைத்த பிரிட்டிஷ் வெள்ளைய கிறிஸ்தவர்களின் கனவில் மண் அள்ளிப் போட்டது சிப்பாய் புரட்சி. பசுவின் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவிய தோட்டாக்கள் மற்றும் ராணுவ வீர்ர்கள் தங்கள் மத அடையாளங்கள் உபயோகப்படுத்த தடை போன்றவை சிப்பாய்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த புரட்சிக்கு வித்திட்டது இளம் மங்கள் பாண்டேயின் வீரமாகும்.
பாண்டே , இந்திய சிப்பாய்களை நோக்கி “சகோதர வீரர்களே! நம்மையும், நம் மத உணர்வுகளையும் மதிக்காமல் அவமதிக்கும் இந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திடுவீர்! இவர்களைத் துரத்திவிட்டு நமது நாட்டை மீண்டும் பழைய உன்னத நிலைக்கு உயர்த்திடுவோம். செயல்படுங்கள்!” என்று உரக்கக் கூவினார். புரட்சியின் முடிவில் மிலேச்சர்கள் கையில் அகப்படுவதைக் காட்டிலும், உயிர்த்தியாகம் செய்வதே மேல் என்று துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறையிலிருந்து 1857 ஏப்ரல் 8ஆம் தேதி மாவீரனைப் போல தலை நிமிர்ந்து தூக்கு மேடை ஏறினார்.
வாழ்க மங்கள் பாண்டே புகழ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here