ஆர்.எஸ்.எஸ் பெயரில் ஜிஹாதிகள் பகிரும் போலி கடிதம்

0
336

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) இழிவுபடுத்தும் நோக்கத்துடன், தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஜிஹாதிகள் தங்களது அனைத்து வரம்புகளையும் அடிக்கடி தாண்டி வருகின்றனர். இதுபோன்ற மற்றொரு நிகழ்வாக, பாரதத்தில் உள்ள முஸ்லிம் பெண்களை காதல் வலையில் சிக்க வைக்க சதி செய்வதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ் பெயரில் ஒரு போலி கடிதத்தை அவர்கள் திட்டமிட்டு சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள அந்த போலி கடிதத்தில் ஹிந்து ஆண்கள், முஸ்லிம் பெண்களை தங்கள் பொய்யான காதலில் சிக்க வைக்குமாறு கோருவதாக அறிக்கைகள் உள்ளன. இந்தக் கடிதத்தின் நகல்களை டுவிட்டரில் ‘பகவா லவ் டிராப்’ என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும், இந்த போலி ஆர்.எஸ்.எஸ் கடிதத்தில், முஸ்லிம் பெண்களை காதல் வலையில் சிக்க வைக்க ஹிந்து இளைஞர்களுக்குக் கற்பிக்க 15 நாள் பயிற்சித் திட்டத்தை வழங்குவதாகவும் உறுதியளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். OSINT டுவிட்டர் கைப்பிடியான ‘டி இன்டென்ட் டேட்டா’வின் படி, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை சேர்ந்த ஷாவாஜ் அஞ்சும் சித்திக் இந்த போலி கடிதத்தின் ஸ்கிரீன் ஷாட்களை முதலில் வெளியிட்டார் என கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த போலி கடிதத்தில் அச்சிடப்பட்ட ஆர்.எஸ்.எஸ் லோகோவிலும் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது என்று அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here