வீர சாவர்க்கரின் பிறந்த நாள்_அரசு விழா

0
166

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘மோடி’ என்ற இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது எம்.பி. பதவி பறிபோனது. இந்த சூழலில், ‘மோடி’ சமூகத்தை இழிவாக பேசியதற்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. ஆனால் ராகுல் காந்தி, ‘மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. ஆகவே, மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று தெரிவித்தார். இது சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிராவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.கவினர், பொதுமக்கள், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணியினர் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியினரே ராகுல் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராகுல் தொடர்ந்து சாவர்க்கரை இழிவுபடுத்தி வருகிறார். இதேபோல அவர் தொடர்ந்து அவர் பேசினால் பொதுவெளியில் அவர் நடமாட முடியாத சூழல் உருவாகும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். மகாராஷ்டிர மாநில பா.ஜ.கவும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் மகாராஷ்டிரா முழுவதும் வீர் சாவர்க்கர் யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தற்போது, ‘வீர சாவர்க்கரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here