உலக அளவில் முன்னேற்றம் : ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர் பாராட்டு

0
187

இந்தியாவின் உற்பத்தி துறையை மேம்படுத்தும் வகையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அந்த நாட்டு போக்குவரத்து மந்திரியுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த தகவலை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு அவர் பெருமிதம் தெரிவித்து இருந்தார். ஜெய்சங்கரின் இந்த பதிவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்த பிரதமர் மோடி, ‘இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்விக்கும்! மேக் இன் இந்தியா திட்டம் தொடர்ந்து உலக அளவில் முன்னேறி வருகிறது’ என குறிப்பிட்டர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here