சீனாவை முந்தி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை தற்போது 142.86 கோடியாக அதிகரித்துள்ளது. இது சீனாவின் 142.57 கோடி என்பதை விட 29 லட்சம் அதிகமாகும். மூன்றாவது இடத்தில் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும்.
கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டுதான் முதல்முறையாக அதற்கு முந்தைய ஆண்டைவிட குறையத் துவங்கியது. இந்தியாவின் மக்கள்தொகையில் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் சராசரியாக, பெண்கள் 82 வயது வரையிலும், ஆண்கள் 76 வயது வரையிலும் உயிர் வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்தியாவில் ஆண், பெண் இருவரும் சராசரியாக, 71-74 வயது வரை வாழ்கின்றனர் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.