ஏப்ரல் 20, 1904ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார். தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், இயக்குனருமான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார். 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பி. யு. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர். “தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார்.