தமிழக சட்டசபையில் ஏப்., 21ம் தேதி ‘2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்த சட்ட முன்வடிவு’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்தது. இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளதால் சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.