அருப்புக்கோட்டை கண்டுபிடிக்கபட்ட யோக வீரபத்திரர் சிற்பம் 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை

0
458

அருப்புக்கோட்டை அருகே பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த யோக வீரபத்திரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் எஸ். நாங்கூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் கால யோக வீரபத்திரர் சிற்பம் கண்டறியப்பட்டது. அவர்கள் கூறியது : வீரபத்திரர் 64 சிவ முகூர்த்தங்களின் ஒருவராக அறியப்படுகிறார். அசுர குல வீர மார்த்தாண்டன் மூவுலகையும் ஆள நினைத்து பிரம்மனிடம் வரம் பெற்றான். அதன்படி தேவர்களை கடுமையாக துன்புறுத்தியதால், தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க சிவபெருமானின் வியர்வை துளிகள் ஒவ்வொன்றிலும் வீரபத்திரர்கள் தோன்றி, வீரமார்த்தாண்டனை கொன்ற கோலமே வீரபத்திரர் கோலம். தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமானது யோக நிலையில் அமர்ந்திருக்கும் சிற்பம். இது மூன்றரை அடி உயரம் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் 4 கரங்கள் உள்ளன. வலது மேற்கரத்தில் மானும், இடது மேல் கரத்தில் அக்க மாலை (ருத்ராட்ச மாலை) யும், இரண்டு முன் கரங்களும் கீழே தொங்கவிட்டபடியும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கால்களும் குத்த வைத்தவாறு யோக பட்டையுடன் சிற்பம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here