ந சஞ்சீவி

0
211

பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி, 2.5.1927ஆம் நாள் திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய மு. நடேசனார், கண்ணம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் திருச்சியில் உள்ள பள்ளிகளிலேயே படித்து முடித்தார். பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1941-43ஆம் கல்வியாண்டுகளில் பயின்று இடைக்கலைப் (Intermediate) பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1943-45 ஆம் கல்வியாண்டுகளில் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், முனைவர் மு. வரதராசன் (மு.வ) ஆகிய பேராசிரியர்களிடம் பயின்று சிறப்புத் தமிழில் இளங்கலைப் (Bachelor of Arts) பட்டமும், 1947-50 ஆம் கல்வியாண்டுகளில் பயின்று கீழ்த்திசை மொழிகளில் சிறப்பு இளங்கலைப் பட்டமும் (Bachelor of Oriental Language – Honours) பெற்றார்.  சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டில் பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் புறநானூற்று ஆராய்ச்சி என்னும் பொருளில் ஆய்வு செய்து இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டமும் பேராசிரியர் மு.வ.வின் வழிகாட்டுதலில் சங்க நூல்களில் அடைவளம் என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1969ஆம் ஆண்டில் முனைவர் (Doctor of Philosophy) பட்டமும் பெற்றார்.  தமிழ் மொழிக்காக, சமுதாயத்திற்காக, அறிவியல் வளர்ச்சிக்காக பாடுபட்ட மாமனிதர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here