பாரதத்தில் லித்தியம் படிவுகள் கண்டுபிடிப்பு

0
220

நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. லித்தியம் ஒரு இரும்பு அல்லாத உலோகம் மற்றும் தற்கால சார்ஜ் செய்யத்தக்க மின்சார பேட்டரிகளில் உள்ள முக்கிய பொருளாகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால் ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் லித்தியம் என ஊகிக்கப்பட்ட வளங்களை (ஜி3) முதன்முறையாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. மேலும் லித்தியம், தங்கம் உள்ளிட்ட 51 கனிம தொகுதிகள் அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். இந்த 51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் தங்கம் மற்றும் பொட்டாஷ், மாலிப்டினம், அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள் தொடர்பானவை. ஜம்மு மற்றும் காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழகம், தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் அவை பரவியுள்ளன. இதைத்தவிர, 7897 மில்லியன் டன்கள் கொண்ட நிலக்கரி மற்றும் லிக்னைட் பற்றிய 17 அறிக்கைகளும் நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்திய புவியியல் ஆய்வு மையம் முக்கியமான கனிமங்கள் குறித்து 115 திட்டங்களையும், உர கனிமங்கள் மீது 16 திட்டங்களையும் வகுத்துள்ளது” என்று மத்திய சுரங்க அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here