டெல்லி, அரியானாவில் 20 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

0
106

இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் டெல்லி போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இந்தியாவில் உள்ள சிலரை தங்களது கட்டுக்குள் வைத்து, வேலைக்கு அமர்த்தி சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என உளவு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.டெல்லி போலீசார் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள 20 இடங்களில் துவாரகா மாவட்ட போலீசார் காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில், பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள், பணம் மற்றும் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றி உள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.டெல்லியில் ஓரிடத்தில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, ஜஜ்ஜார் மற்றும் அரியானாவின் பிற இடங்களில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here