சூடானில் இருந்து 3800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆபரேசன் காவேரி திட்டம் மூலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்,சூடானில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பெங்களூரில் பிரச்சாரத்துக்கு இடையே இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டு மக்கள் துன்பத்தில் தவிப்பதை தம்மால் காண முடியவில்லை என்றார்.மிகப்பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை சூடானில் இருந்து வெளியேற்ற தயங்கிய நிலையில், இந்தியா துணிவுடன் தனது குடிமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.