பயங்கரவாதத்திற்கு நிதியுதவி தடுப்பதில் இந்தியா தீவிரம்: நிர்மலா சீதாராமன்

0
182

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், சட்டத்திற்கு புறம்பான நிதிப் பரிவர்த்தனைகளை கண்காணித்து தடுக்கும், எப்.ஏ.டி.எப்., அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சர்வதேச நிதிச்சந்தையின் பாதுகாப்பு விஷயத்தில், எப்.ஏ.டி.எப்., முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பின் திட்டங்களுக்கு இந்தியா முழு ஆதரவு தந்து வருகிறது. குறிப்பாக சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி, ஆயுதக் கொள்முதல் ஆகியவற்றை தடுப்பதில் எப்.ஏ.டி.எப்., உடன் இந்தியா கைகோர்த்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here