மஹாராணா பிரதாப சிம்மன்

0
203

மஹாராணா பிரதாப சிம்மன் 483 வது பிறந்த தினம்.
பாரத வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமான, இஸ்லாமிய படையெடுப்புகளின் நடுவே அவைகளை எதிர்த்து எதிரிகளின் சிம்ம செப்பனமாக
மஹாராணா பிரதாப சிம்மன் மட்டுமே தன்னந்தனியானாக உறுதிபட நின்றார். ஹிந்து தர்மத்தை காக்கவும், ஹிந்து ராஷ்ட்ரத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.
மொகலாய அக்பரோ மஹாராணா பிரதாப்பை எதிர்த்து படையெடுப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக நடத்திக்கொண்டே இருந்தான், ஆனாலும் ஒருபோதும் அவர் வெற்றி பெறவில்லை. ஏராளமான அளவில் பணச்செலவு செய்து சூழ்ச்சிகள் செய்தும் மஹாராணா பிரதாப்பைத் தோற்கடிக்க முடியவில்லை.
முப்பது ஆண்டுகள் மேலாக மஹாராணா பிரதாப் மொகலாய அக்பரை விஞ்சியே இருந்தார். மஹா ராணா பிரதாப் பயன்படுத்தி வாள் நாற்பது கிலோ எடை கொண்டதாகும். போர்களத்திற்க்கு செல்லும் போது இரண்டு வாட்களை ஏந்திச் செல்வது அவரது வழக்கமாகும். சண்டை ஏற்படும் போது தனது எதிரிக்கு ஒரு வாளினை அவர் நிராயுதபாணியாக இருந்தால் வழங்குவதுண்டு.
பல்லாண்டுகளாக அவர் காட்டில் மறைந்து வாழ்ந்த சமயங்களில் அவருக்கு காட்டு வகை ரசம் நிறைந்த சிறு பழங்களும் , மீன்பிடித்தலும் சிரமமான நாட்களில் புல் விதைகள் மூலம் செய்த ரொட்டியும் அவரின் பசியை போக்க உதவின. சேத்தக் (Chetak) மகாராணா பிரதாப் சிங்கின் செல்ல போர்க்குதிரை. ஜூன் 21, 1576 அன்று நடைபெற்ற போரில் இக்குதிரையின் பங்கு மகத்தானது. இக்குதிரை கதியாவாரி எனும் நம்நாட்டு வகையைச் சேர்ந்தது.
அக்பரின் படைக்கு தலைமை தாங்கி ராஜபுத்திர மன்னன் ராஜா மான்சிங் (அந்த ஊர் எட்டப்பன்),
மகாராணாவை எதிர்த்து ஹால்டிகாட் எனும் இடத்தில் போர்தொடுத்தான்.
சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்ட மகாராணாவை, அவரது அருமை குதிரை சேதக் தான் படுகாயமுற்றபோதும் தனது ப்ரிய எஜமானரை பகைவர்களிடம் சிக்காமல் தன் வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு வெகுதூரத்தில் உள்ள காட்டுக்குள் மறைவான பகுதிக்கு கொண்டு பாதுகாத்ததின் மூலம் அது தன் எஜமானரான மஹராணா பிரதாப சிம்மன் மீது எவ்வளவு ப்ரியமாக இருந்தது என்பதை அறியலாம்.
“சேத்தக்” கை (குதிரையை) சிறப்பிக்கும் வண்ணம் இந்திய இராணுவத்தில் ஒரு வகை ஹெலிகாப்ட்டருக்கு Chetak என்ற பெயரை இந்திய அரசு வைத்துள்ளது.
அந்த குதிரை சேத்தக் (chetak)மீதுதான் பிராதாப்பிற்க்கு எவ்வளவு பிரியம்.
கத்தியவார் பகுதியின் வெள்ளை நிறக் குதிரையாகும்.
(இந்திய இனம் சார்ந்த தோன்றலாகும்) அது குள்ளமான கழுத்து, அடர்ந்து செறிந்த முடிகொண்ட வால், குறுகலான முதுகு, பெரிய விழிகள், கட்டு மஸ்தான தோள்கள், அகன்ற நெற்றி மற்றும் பரந்த நெஞ்சம் கொண்டதாகும்.
மேலும் பார்வைக்கு வனப்பு மிகுந்ததாகவும், செய்யுள் நடையில் புனிதமாகவும் அது கருதப்பட்டு வந்தது, இப்புரவி ஒரு சமச்சீரான உடலமைப்பு அதற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை அளித்தது, அது “பறக்கும்” பாதங்கள் கொண்டது. அதுபற்றி மேலும் விளக்குகையில் ஓர் அபூர்வமான, துல்லியமான நுண்ணறிவு படைத்தது என்றும், மேலும் கட்டுப்பாடு மற்றும் துணிவு இரண்டும் ஒருசேர பெற்றதென்பதும், தனது எஜமானிடம் அளப்பறிய அன்பு கொண்ட ஒரு உன்னத ஜீவனாகும்.
மஹாராணா பிரதாப்பின் வெண்கலச் சிலை மற்றும் அவரது விருப்பமான குதிரை சேத்தக் தனது ப்ரியமான எஜமானைக் காத்து வந்ததாலும் அதன் உயிர்பிரியும் வரை உடன் இருந்து பாதுகாத்ததாலும், மோத்தி மக்ரியின் உச்சியில் (முத்து மலை) கம்பீரமான குதிரைச் சிலையும் உள்ளது.
உள்ளூர் மக்கள் அந்தக் குன்றின்மீது ஏறிச் சென்று மஹா ராணா பிரதாபிற்கும் மற்றும் அவரது ப்ரியமான செல்லக்குதிரை ‘சேத்தக்’கிற்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அங்கே மேலும் முதல் உதய்பூரின் அமைதியான அரண்மனையின் சிதலங்கள் காணலாம் மற்றும் ஓர் அழகான ஜப்பானிய பாறைத் தோட்டம் ஒன்று அதிக தூரம் இல்லாமல் அமைந்துள்ளது. அந்த நினைவகத்தில் ஒளி மற்றும் ஓலிஅமைப்பு ஏற்படுத்தப்பட்டு ராஜஸ்தானில், மேவாரின் 1400 வருடங்களான கீர்த்திமிகு வரலாற்றை பறைசாற்றிக் கொண்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here