#தேசியதொழில்நுட்பதினம்

0
90

நமது நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொருவரும் இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படும் விதமாகவும், தேசிய தொழில் நுட்பத் தினம் மே 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்திய இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
1998 மே 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில், ஆறாவது நாடாக இந்தியா இணைந்தது. இந்த சாதனையை அங்கீகரிக்க இந்த நாள், தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது
இது அணு ஆயுதத்தில் இந்தியாவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஆபரேசன் சக்தி என்ற பெயரில் நடைபெற்ற அணு ஆயுத சோதனைக்கு பிறகு அப்போது பிரதமராக இருந்த இந்தியாவை வாஜ்பாய் அணு ஆயுத நாடாக அறிவித்தார்.
இந்தியா தற்போது உலக அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
இதே நாளில் திருசூல் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்த வெற்றிகளை கொண்டாடும் வகையில் மே 11-ம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
1999-ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் புதிய தொழிநுட்ப கண்டுபிடிப்புகளை வரவேற்கும் வகையில் இந்த நாளை கொண்டாடி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here