சிறப்புப் பண்புப் பயிற்சி முகாம் – 2023 பொது நிகழ்ச்சி இலுப்பூர்

0
504
॥ॐ॥
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், தமிழ்நாடு
சிறப்புப் பண்புப் பயிற்சி முகாம் – 2023
இலுப்பூர்- புதுக்கோட்டை மாவட்டம்.
பத்திரிக்கைச் செய்தி


  இலுப்பூர் ராஜராஜேஸ்வரி டவுண்சிப் வளாகத்தில் கடந்த 02-05-2023 முதல்17-05-2023 வரை 15 நாட்கள்  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பண்புப் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 41-65 வயதுக்குட்பட்டவர்கள் 211 பேர் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இவர்களுக்கு விளையாட்டு யோகா, சிலம்பம், பாரத வரலாறு, இந்து மதத்தின் கோட்பாடுகள், இந்துமத மகான்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு அரும்பணிகள்,  அதன் லட்சியம்,  கடந்து வந்த பாதை ஆகியவை குறித்து ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் 50 பேர் பயிற்சி அளித்தனர்
இதன் நிறைவு நிகழ்ச்சியாக, இன்று 16-05-2023 மாலை 06-00 மணிக்கு முகாமில் பயிற்சி பெற்றவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தாங்கள் பெற்ற பயிற்சிகளான 1) யோகாசனம்,2) சிலம்பம் 3) அணிவகுப்பு  4) விளையாட்டுக்கள், ஆகியவற்றை செய்து காட்டினர்.
இநநிகழ்ச்சிக்கு திரு.சண்முகநாதன் (தொழிலதிபர்) அவர்கள் தலைமை தாங்கினார், முகாம் செயலாளர் ஈரோடு திரு,ஜெகதீசன், அவர்கள் முகாம் அறிக்கை வாசித்தார்..  புதுகோட்டை மாவட்ட இணைச்செயலாளர் திரு. கணேஷ்பாபு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்., ஆர்.எஸ்.எஸ்,  அமைப்பின் அகிலபாரத செயலாளர் திரு. ரவீந்திர ஜோஷி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்,  தென் தமிழக அமைப்பாளர் திரு. கா.ஆறுமுகம் அவர்கள் சிறப்புரையில் கூறியதாவது,
இந்த மண் ஸ்ரீராமானுஜர் பிறந்தமண், 108 வைணவ ஸ்தலங்கள், பிரமாண்டமான தஞ்சை பெரிய கோவில், போன்றவை நிறைந்த பூமி இந்தத் தமிழகம். இந்து தர்மம் என்பது சனாதன  தர்மம். சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தது மீனாட்சி திருமணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், இவற்றைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இது நமது பூமி ஆன்மீக பூமி என்று பறை சாற்றுகிறது.
சீர்காழியில் ஒரு அகழ்வாராய்ச்சியில் ஏராளமான செப்பேடுகள் கிடைத்துள்ளன. இம்மாதிரி பழம்பெருமையும், நமது கலாச்சாரமும், ஆயிரக்கானக்கான ஆண்டு படையெடுப்புகளால் அழிக்கப்பட்டன. முகலாய சாம்ராஜ்யத்தை முறியடித்து இந்து சாம்ராஜ்யம் நிறுவிய சத்ரபதி சிவாஜியின் 350வது ஆண்டு முடிசூட்டுவிழாவை நாம் கொண்டாடி வருகிறோம். பிடிட்டீஸார் நம்மை அடிமைப்படுத்தி கல்வி முறையில்  மாற்றம் செய்து குமாஸ்த்தாக்களை உருவாக்கும் மெக்காலே கல்வி முறையைத் திணித்தனர். பின்னர் தேச விடுதலைக்காக ஏராளமான சுதந்திரப் போராளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
உலகின் குருவாக பாரதத்தை உருவாக்கும் லட்சத்தியத்தோடு, ஆர்.எஸ்.எஸ்.ன் தன்னார்வத் தொண்டர்கள் பயிற்சி பெற்று பணிபுரிந்து வருகின்றனர். நம் குடும்பங்கள் நல்ல இந்து குடும்பங்களாக இருப்பதற்காகவும், இளைஞர்கள் போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுக்கவும் குடும்ப ப்ரபோதன் துறை வேலை செய்கிறது. சமுதாய நல்லிணக்கம்,  தீண்டாமை ஒழிப்பு, இவற்றிற்காக சங்கம் வேலை செய்கிறது.  பொது மக்கள் அனைவருக்கும்   கோவில்கள், நீர் நிலைகள், மயானம், இவை மூன்றும்  பொதுவாக இருக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது.
சுற்றுச் சூழலை பாதுகாக்க, அதாவது நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிர்த்தல், ஆகியவற்றிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான செயல் திட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ்.சின் தனித்துறை கவனித்து வருகிறது.
மதமாற்றம் தடுக்கவும், நாட்டுப்பசுக்களைப் பாதுகாக்கவும், கிராம முன்னேற்றத்திற்கும், ஆர். எஸ்.எஸ். பணியாற்றி வருகிறது.   அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிசேகம் நடைபெறும் சமயத்தில் 500 கோடி மரக்கன்றுகள்  நடுவதற்கு பொதுமக்கள், ஒத்துழைக்கவேண்டும்.  வரும் 2025ம் ஆண்டு ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் 100 வது ஆண்டுவிழா நடைபெறுவதை ஒட்டி ஏராளமான மக்களை இணைந்து பணியாற்ற ஆர்.எஸ.எஸ். அழைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புக்குழு தலைவர், திரு கரம்சிங் சர்மா அவர்களும், மற்றும் உள்ளூர் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக இராமேஸ்வர கோட்ட செயளாலர் திரு.  பி.கே.நாகராஜன்  அவர்கள் நன்றி கூற சங்கப் ப்ரார்த்தனையுடன் விழா இனிது நிறைவுற்றது.
                                                                                                        இங்கனம்
                                                      தேசப்பணியில்
                                                     பா. விஸ்வநாதன்
                                                    (முகாம் தலைவர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here