வெ_இராதாகிருட்டிணன்

0
147

#வெ_இராதாகிருட்டிணன் #venkatramanradhakrishnan
1. மே18, 1929 சென்னைக்கு அருகே உள்ள தண்டையார்ப் பேட்டையில் பிறந்தார். சென்னையில் கல்வி பயின்று, பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.
2. தந்தையாரின் புகழின் நிழலில் தான் இருக்கக்கூடாது என்பதைக் கடைசிவரை உறுதியாகப் பின்பற்றிய அறிஞர் இராதாகிருட்டிணன்.
3. அனைத்துலக வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராக 1988-1994 ஆம் ஆண்டுகளில் பொறுப்பேற்று இருந்தார். அதற்கு முன்னதாக 1981-1984 ஆம் ஆண்டுகளில் அனைத்துலக வானொலியலைகள் அறிவியல் ஒன்றியத்தின் தலைவராக இருந்தார்.
4. உலகளாவிய பல அறிவியல் மன்றங்களிலும், கழகங்களிலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். நெதர்லாந்தின் வானொலியலை வானியல் (ரேடியோ வானியல்) நிறுவனத்தின் வெளிநாட்டு அறிவுரையாளராகப் பணியாற்றினார்.
5. ஸ்வீடன் அறிவியல் மன்றத்திலும், அமெரிக்க நாட்டு அறிவியல் மன்றத்திலும் வெளிநாட்டு உயரறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
#சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here