ஜோத்ஸ்னா பத்மநாபன் என்னும் பெண் காட்டூர் (திருச்சூர்) பைங்கன்னிக் காவு பத்ரகாளி கோயிலில் தந்த்ரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். கேரளத்தில் கோயிலில் பூஜை செய்ய தேர்வாகியுள்ள முதல் பெண் ஜோத்ஸ்னா பத்மநாபன் என்பது முக்கிய மான ஒன்றாகும்.
2010 ஆம் வருடம் காட்டூர் பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போதே ஜோஸ்த்னா அக்கோயிலின் உப கோயிலில் மூலஸ்தானத்தில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்துள்ளார். அப்போது அவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுவயதில் இருந்தே இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு பூஜை விதிகளை முறையாக தந்தை பத்மநாபனிடம் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். கேரள மாநிலத்தில் ஆகம பூஜை முறைகள் பற்றிய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர். இவரது தாய் அர்ச்சனாவும் மகளின் ஆர்வத்திற்கு உதவி புரிந்துள்ளார்.
இனி திருச்சூர் காட்டூர் பைங்கன்னிக் காவு பத்ரகாளி அம்மன் கோயிலில் ஜோத்ஸ்னா பத்மநாபன் பூஜை செய்வதைக் காண முடியும்.