- திருவிதாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரத்தில் 1858 மே 19 அன்று சமஸ்கிருத அறிஞரான பனவிலகத்து நீலகண்ட பிள்ளை, பார்வதி பிள்ளை மகனாக பிறந்தார்.
- தந்தையின் கீழ் ஆயுர்வேதத்தில் பாடங்களும், மந்திரமும், தந்திரமும் பயிற்சியாக இருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள முதல் ஆங்கிலப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.
- 1881 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்தில் 7 வது இடத்தைப் பெற்றார். இந்த காலகட்டத்தில், இவர் தி கேரள பேட்ரியாட் என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார்.
- ராமன் பிள்ளையை பலர் வங்காள மொழியின் பங்கிம் சந்திர சட்டர்ஜி , மராத்தியில் ஹரி நாராயண் ஆப்தே ஆகியோருடன் ஒப்பிடுகிறார்கள். இவர் வெளியிட்ட முதல் புத்தகமான சந்திரமுகிவிலாசம் என்பது ஒரு நையாண்டி எழுத்தாகும்.
- இந்திய அஞ்சல் துறை 2010 மே 19 அன்று இவரின் நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது. திருவனந்தபுரத்தின் வழுதக்காட்டில் ஒரு சாலைக்கு சி.வி.ராமன் பிள்ளை சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
- திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான அரையூரை உள்ளடக்கிய செங்கால் பஞ்சாயத்திற்கு , 1970 இல் சி.வி.ஆர் புரம் என பெயரிடப்பட்டது.
#cvramanpillai #சான்றோர்தினம்