இந்திய வங்கிகள் தொடர்ந்து நிலையானதாக உள்ளது – ரிசர்வ் வங்கி

0
79

இந்திய தொழில்கூட்டமைப்பின் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆற்றிய உரை: “புவி அரசியல் காரணமாக நிகழும் மோதல்கள், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்க உயர்வு, பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகளால் ஏற்பட்டுள்ள கடினமான நிதிநிலை ஆகியவை காரணமாக வளர்ச்சியில் பின்தங்குவதற்கான சவாலை சர்வதேச பொருளாதாரம் எதிர்கொண்டு வருகிறது. கடந்த 2022ல் 3.4 சதவீதமாக இருந்த உலகின் பொருளாதார வளர்ச்சி 2023ல் 2.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 2024ல் இது 3 சதவீதமாக சற்று உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உள்ள போதிலும், 2023ல் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் ஆசியா-பசுபிக் நாடுகள் 70 சதவீத பங்கினை வகிக்கும் என்றும், உலகின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 15 சதவீத பங்களிப்பை வழங்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. எதிர்கால பொருளாதாரக் கொள்கை நிச்சயமற்றதாக உள்ள போதிலும், சர்வதேச வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை எளிதாக்கவும், எரிபொருள் மற்றும் உணவு சந்தைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும், உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், சீன பொருளாதாரத்திற்கு பதிலளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here