ஜம்முவில் ஏழுமலையான் கோயில்

0
177

ஜம்மு காஷ்மீரின் மஜீன் பகுதியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜுன் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டப்பட்டு வருகிறது. சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, ஐதராபாத், புவனேஷ்வர் ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவ்வகையில், ஜம்முவின் மஜீன் பகுதியில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஆண்டு வழங்கியது. அந்த இடத்தில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது சிறப்பு. ஜம்முவில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயிலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. ஜுன் 8ம் தேதி கோயில் கும்பாகிஷேகம் நடத்தப்படும். திருப்பதி கோயிலில் எந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைகள் இங்கும் பின்பற்றப்படும்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here